Search This Blog

Saturday, June 10, 2017

பாலில் கலப்படம்:நாம் வீட்டிலேயே கண்டறிவது எப்படி?

நாம் வாங்கும் பால் தரமானதா? அது பால்தானா என்பதை வீட்டிலேயே எளிய முறையில் பரிசோதிக்கும் வழிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.

 தனியார் நிறுவனப் பாலில் ரசாயனம் கலப்பதாக தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்து நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதுரையில் பாலின் தரத்தை அறிய பால் தரப்பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏராளமான பொது மக்களும் தனியார் நிறுவனங்களும் பாலைக் கொண்டு வந்து தரத்தை அறிந்து செல்கின்றன.

நமக்கு அந்த வசதி இல்லையே ஏங்குபவர்களுக்கு உணவு பொருள் பாதுகாப்பு நிபுணர் ஒருவர், பாலின் தரத்தை வீட்டிலேயே எளிதாக அறியும் வழிமுறைகளை தொலைக்காட்சி ஒன்றில் விளக்கியுள்ளார்.

அதாவது முதல் சோதனை,
பாலில் தண்ணீர் கலப்பதை கண்டறிய - பாலில் தண்ணீர் கலப்படம் செய்திருப்பதை லேக்டோ மீட்டர் மூலம் கண்டுபிடித்துவிடலாம். பாலில் லேக்டோ மீட்டரை வைத்தால் அது 1.026 எண்ணுக்குக் கீழே காட்டினால் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யலாம். இதில் ஒரே ஒரு ஆறுதல் பாலில் தண்ணீர் கலந்தால் நமக்கு பண இழப்பு தானே தவிர, உடலுக்கு ஒரு கெடுதலும் இல்லை. அதில்லாமல் தற்போது பால் விலைக்கு ஏற்ப தண்ணீரும் விற்பதால் அதிக நஷ்டம் இல்லை என்றும் ஆறுதல் கொள்ளலாம்.

பாலில் மாவு பொருட்கள் கலந்திருந்தால் - இதனைக் கண்டறிய சிறிது பாலில் ஒரு சில சொட்டு டிஞ்சர் சேர்த்தால் உடனடியாக பால் நீல நிறத்தில் மாறும். அப்படியானால் அது மாவு பொருள் கலப்படம் செய்யப்பட்ட பால் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

டிஞ்சர் இல்லாமலும் இதனை சோதிக்கலாம். அதாவது, வழுவழுப்பான தரையில் சுத்தமான பாலை ஒரு சில துளிகள் விட்டால் அது அப்படியே தரையில் இருக்கும். ஆனால் மாவு கலந்த பாலை விட்டால் அது மாவின் கனத்தினால் தரையில் ஓடும்.

சோப்புத்தூள் கலந்திருந்தால்?

பால் பொங்கும் போது அதிகம் நுரை வருவதற்காக அதில் சோப்புத் தூள் கலந்திருந்தால், அதையும் எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். அதாவது ஒரு சிறிய கண்ணாடி குடுவையில் பாலை ஊற்றி நன்கு குலுக்கினால் நுரை வரும். வெறும் பாலாக இருந்தால் சிறிது நேரத்தில் அந்த நுரை தானாகவே போய் விடும். ஆனால், சோப்புத் தூள் கலந்த பாலாக இருப்பின் அந்த நுரை போகாது. அப்படியே இருக்கும். பால் கொதிக்கும் போது அதிகமாக நுரை வந்தாலும் அதில் சோப்புத் தூள் கலக்கப்பட்டிருக்கலாம் என்பதை அறியுங்கள்.

சுத்தமான பாலை இரண்டு ஸ்பூன் எடுத்து அதில் எலுமிச்சை சாறு கலந்தால், அந்த பால் உடனே திரிந்து விடும். ஆனால், கலப்பட பால் திரியாது.

பாலில் ரசாயனப் பொருட்கள் கலந்திருந்தால் அதனை பிஎச் காகிதம் கொண்டு கண்டு பிடித்து விடலாம். பிஎச் காகிதம் என்று கேட்டால் தற்போது பல கடைகளில் கிடைக்கிறது. சிறிய காகிதத் துண்டுகள் போல இருக்கும். அதில் அளவீடுகளும் இருக்கும்.

ஒரு பாலை இந்த பிஎச் காகிதம் கொண்டு பரிசோதித்தால், அது பிஎச் 6.5 என்ற அளவில் இருக்க  வேண்டும்.  அல்லது 6.4 ஆகவும் இருக்கலாம். 6க்கும் குறைவாக இருந்தால் நிச்சயம் அது அமிலம் கலந்த பாலாக இருக்கலாம்.

ஒரு சிறிய டம்ளரில் பாலை எடுத்து அதில் பிஎச் காகிதத்தைப் போட்டால் காகிதம் பச்சை நிறமாக மாறினால் அது நல்ல பால். அதுவே, மஞ்சள் அல்லது ஆரஞ்சு, வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது ரசாயனம் கலந்த பால் என்பதை உறுதி செய்யலாம் என்று கூறுகிறார்கள்.

Thursday, May 18, 2017

+2,SSLC- பொதுத் தேர்வுகளில் தமிழ் வழியில் படித்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

 பிளஸ் 2, எஸ்எஸ்எஸ்சி பொதுத் தேர்வுகளில் தமிழ் வழியில்படித்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கூறினார். 
சென்னை தலைமைச் செய லகத்தில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகை யில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.26,913 கோடிஒதுக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 36,830 அரசுப் பள்ளிகளுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பில் கட்டிடங் கள், வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. சில பள்ளி களில் இன்னும் சிறு சிறு தேவை கள் உள்ளன. முன்னாள் மாணவர்கள், தொழி லதிபர்கள், வசதிபடைத்தவர்கள், தொண்டு நிறுவனத்தினர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் தங்கள் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு தேவைப்படும் வசதிகளை செய்துகொடுக்க முன்வருமாறு அன்போடு வேண்டு கோள் விடுக்கிறேன். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப் படும் 14 வகையான நலத்திட்டங் களுக்கு ரூ.2,300 கோடி ஒதுக் கப்பட்டுள்ளது. மேல்நிலைக் கல்வியில் கடந்த 12 ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. தமிழக மாணவர்களை தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு களுக்கு தயார்படுத்தும் வகை யில் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டியுள்ளது.

பாடத்திட்ட மாற்றம் குறித்து ஏற்கெனவே, முன்னாள் துணை வேந்தர்கள், தலைமைச் செயலா ளர் உள்ளிட்டோர் அடங்கிய ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்ட மாற்றம் குறித்தும், பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்தும் 2 நாட்களில் கொள்கைமுடிவு எடுக்கப்படும். பள்ளிக்கல்வித் துறையில் மிகப் பெரிய அளவில் சீரமைப்பு, மாற் றங்கள் கொண்டுவரப்படுகின்றன. அதேபோல, விளையாட்டுத் துறை யிலும் மிகப்பெரிய அளவில் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டுள் ளோம். மாநில, தேசிய அளவில் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

பள்ளிகளில் யோகா, சாலை பாதுகாப்பு விதிகள், தேசப்பற்று தொடர்பான பயிற்சி வகுப்புகளும் கொண்டுவரப்பட உள்ளன. பிளஸ் 2, எஸ்எஸ்எல்சிபொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர் களுக்கு அரசு கல்வி உதவித் தொகை வழங்குகிறது. இனிமேல், தமிழ்வழியில் படித்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.உதவித்தொகை திட்டத்தில் அவர் களுக்கு முன்னுரிமை அளிக்கப் படும். இவ்வாறு அமைச்சர் செங் கோட்டையன் தெரிவித்தார்.

Posted by kalviseithi.net

You can not join college if you are 24 years old

24 வயதை தாண்டினால் கல்லூரியில் சேர முடியாது

'கலை, அறிவியல் கல்லுாரிகளில், 24 வயதுக்கு மேலானோரை பட்டப்படிப்பில் சேர்க்கக்கூடாது' என, கல்லுாரிகள் எச்சரிக்கப்பட்டுள்ளன. கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மாணவர்களை சேர்ப்பதற்கான வழிமுறைகளை, கல்லுாரிகளுக்கு, இயக்குனர், மஞ்சுளா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:இட ஒதுக்கீடு மற்றும் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயாரிக்க வேண்டும்இளநிலை பட்டப்படிப்பில், மாணவர்களை சேர்க்க, 21 வயது அதிகபட்ச வயது நிர்ணயிக்கப் படுகிறது. பொது பிரிவினர் தவிர மற்றவர்களுக்கு, மூன்றாண்டுகள் வரை கூடுதல் சலுகை உண்டு. அதன்படி, 24 வயது வரையுள்ளோரை, கல்லுாரிகளில் நேரடி பட்டப்படிப்புக்கு சேர்க்கலாம்மாற்று திறனாளிகளுக்கு, ஐந்து ஆண்டு சலுகை வழங்கி, 26 வயது வரை, மாணவர்களை சேர்க்கலாம்.

Wednesday, May 17, 2017

1663 Teacher Vacancies: Notification issued by Teacher Examination Board

1663 ஆசிரியர் காலியிடங்கள்: அறிவிக்கை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்

பள்ளிக் கல்வித் துறை, இதர துறைகளின்கீழ் உள்ள பள்ளிகளில் 1,663 ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) புதன்கிழமை (மே 10) வெளியிட்டது.
இதன்படி, முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை -1 ஆகிய காலி பணியிடங்களுக்கு இணையதளம்(www.trb.tn.nic.in) வாயிலாக விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க மே 30 -ஆம் தேதி கடைசி நாளாகும்.
ஜூலை 2 -இல் எழுத்துத் தேர்வு: ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு ஜூலை 2 -ஆம் தேதி நடைபெறும்.
விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு, கல்வி தகுதிகள், பாடவாரியாக காலி பணியிட விவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 19) காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது.

தேர்வு முடிவுகளை 19.05.2017 காலை 10.00 மணி முதல்

☆ 👉 www.dge1.tn.nic.in

☆ 👉 www.dge2.tn.nic.in

🔹 என்ற இணைய தளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்எனவும், மாணவர்கள் அளித்துள்ள மொபைல் எண்ணிற்கும் மதிப்பெண் விவரம் அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

🔸 இந்த தேர்வுகளிலும் முதல் 3 இடம் பிடித்த மாணவர்கள் விவரம் வெளியிடப்படாது என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

🔹 மறு கூட்டலுக்கு வரும் 19ம் தேதி முதல் 22ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

🔸 இதற்கான கட்டணம் தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கு ரூ.305 ஆகவும், மற்ற பாடங்களுக்கு ரூ.205 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச்மாத 8 ந்தேதிதொடங்கி 30-ந் தேதி வரை நடைபெற்றது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12,187 பள்ளிகளில் இருந்து மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவ-மாணவிகள் (தனித்தேர்வர்கள் உள்பட) தேர்வு எழுதினர்.பள்ளி மாணவ-மாணவிகளில் மாணவர்கள் 4,98,406 பேர், மாணவிகள் 4,95,792 பேர் ஆவர். மாணவிகளை விட 2,614 மாணவர்கள் கூடுதலாக தேர்வு எழுதினர். பள்ளி மாணவர்கள் தவிர 43,824 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதி உள்ளார்கள்.

சென்னையில் 571 பள்ளிகளில் இருந்து மொத்தம் 51,664 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர் இவர்களில் 25,280 மாணவர்கள் மற்றும் 26,384 மாணவிகள் ஆவார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு இணையதளம் மூலம் வெளியிடப்பட உள்ளது.

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in, மற்றும் www.dge2.tn.nic.in, இணையதளங்களில் காணலாம். மாணவர்கள் குறிபிட்டு உள்ல செல்போனுக்கு SMS மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பிவைக்கப்படும். 10ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு ஜூன்மாதம் இறுதியில் நடைபெறும். மறுகூட்டலுக்கு 19 ந்தேதி முதல் 22 ந்தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.மறு கூட்டலுக்க்கான கட்டணம் தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு தலா ரூ.305 மற்றபாடங்களுக்கு தலா ரூ.205 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 25 ந்தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

11ஆம் வகுப்புக்கு மாநில அளவில் பொதுத்தேர்வு - தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு

பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், 
பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.'தமிழகத்தில், அடுத்த ஆண்டு முதல் ப்ளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும்' என்று சென்னையில் பேட்டி அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதிவரும் நிலையில், அடுத்தஆண்டு முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களும் பொதுத்தேர்வு எழுதுவார்கள்.அண்மையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னர், பொதுத் தேர்வுகளுக்கு இனி ரேங்க்கிங் முறை இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

அதன்படி இந்த ஆண்டு முதல் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை. தமிழக அரசின் இந்த முடிவுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே நல்ல வரவேற்புக் கிடைத்தது. இந்நிலையில் தற்போது 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும்என்னும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் செங்கோட்டையன்!

Wednesday, May 10, 2017

கல்விச் செய்தி: B.Sc யை தொடராமல் B.A. பட்டபடிப்பை முடித்தவருக்கு ஆ...

கல்விச் செய்தி: B.Sc யை தொடராமல் B.A. பட்டபடிப்பை முடித்தவருக்கு ஆ...: B.Sc யை தொடராமல் B.A. பட்டபடிப்பை முடித்தவருக்கு (ஒரு ஆண்டு B.Sc. மற்ற இரண்டு ஆண்டுகள் B.A.) TET தேர்வை தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் 4 வாரங்க...

கல்விச் செய்தி: TNTET - 2017 Exam Answer key ( Tentative)

கல்விச் செய்தி: TNTET - 2017 Exam Answer key ( Tentative): TNTET 2017 Exam - Paper 2 Key Answer - Click here TNTET 2017 Exam - Paper 1 Key Answer - Click here

ANNAMALAI UNIVERSITY -DDE MAY 2017 EXAM HALL TICKE...

கல்விச் செய்தி: ANNAMALAI UNIVERSITY -DDE MAY 2017 EXAM HALL TICKE...: ANNAMALAI UNIVERSITY -DDE MAY 2017 EXAM HALL TICKET - Click here

ANNAMALAI UNIVERSITY -DDE MAY 2017 EXAM HALL TICKE...

கல்விச் செய்தி: ANNAMALAI UNIVERSITY -DDE MAY 2017 EXAM HALL TICKE...: ANNAMALAI UNIVERSITY -DDE MAY 2017 EXAM HALL TICKET - Click here

All University UG and PG Syllabus

Follow by Email